உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி அலுவலகங்களில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

ஊராட்சி அலுவலகங்களில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக, காரமடை வட்டாரத்தில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது என காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:-வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் மின்னனு முறையில் விவசாயிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யும் பணியை வேளாண்மை உதவி அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் சமுதாய வள பயிற்றுநர்கள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். காரமடை வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி அலுவலகம் அல்லது கிராம நிர்வாக அலுவலகங்களில், இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களது ஆவணங்களை எடுத்துக் கொண்டு இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை