| ADDED : நவ 18, 2025 03:41 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நாளை நடக்கிறது. பொள்ளாச்சி வடக்கு வட்டார வள மைய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், 1 - 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை (19ம் தேதி) நடக்கிறது. காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது: முகாமில், தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அடையாள அட்டை புதுப்பித்தல் பணி நடக்கிறது. உதவித்தொகை பதிவு செய்தல், ரயில் மற்றும் பஸ் பயணச்சலுகை சான்றிதழ் வழங்கப்படும். 'யுடிஐடி' பதிவு செய்தல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்படும்.மருத்துவ பரிசோதனை அடிப்படையில், இலவச அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்படும். முகாமுக்கு வரும் போது, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் தங்களுடைய பிறப்பு சான்றிதழ் நகல் - 1, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 5, ரேஷன் கார்டு நகல் - 2 அவசியமாக எடுத்துக்கொண்டு வர வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.