அறிவியலை ஜனநாயகப்படுத்த நுால் வெளியீட்டு விழாவில் பேச்சு
கோவை: அவினாசிலிங்கம் பல்கலையில், பாரத மொழிகளின் பெருவிழா, பாரதியார் பிறந்தநாள் விழா, ஆன்ட்ராய்டு நுால் வெளியீட்டு விழா ஆகிய மும்பெரும் விழா நடந்தது.தமிழ் பொருண்மையின் தேவைகள் எனும் தலைப்பில், எழுத்தாளர் முருகவேல் பேசுகையில், ''சுதந்திரத்துக்கு முன் கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. அன்றைய கால கல்வி முறைகள் ஜனநாயக முறையோடு, பள்ளி, கல்லுாரிகளில் கற்பிக்கப்பட்டன. அரசு கொள்கைகள் மொழி பெயர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்தன. சமூகப்பிரச்னைகள் குறித்து எழுத ஆட்கள் குறைவாக இருந்தனர். அறிவியலை ஜனநாயகப்படுத்த வேண்டும். மக்கள் மொழியாக மாற்ற வேண்டும்,'' என்றார்.முன்னதாக, பாரத மொழிகளின் பெருவிழா போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பல்கலை துணைவேந்தர் பாரதிஹரிசங்கர், கலை, சமூக அறிவியல் துறை தலைவர் ஷோபனா கோக்கடன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.