உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தம்பு பள்ளியில் விளையாட்டு விழா

தம்பு பள்ளியில் விளையாட்டு விழா

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி தம்பு மேல்நிலை பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். செயலாளர் ப்ரீத்தா பிரியதர்ஷினி, தேசிய கொடியை ஏற்றினார். இந்திய தேசிய ராணுவத்தின் டெல்டா படையின் லெப்ட்டினட் கர்னல் கமாண்டர் ஈசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம். இவை அனைத்தையும் விளையாட்டு வழங்குகிறது என்றார்.விழாவில், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை அக்னி அணியினர் வென்றனர். ஆண்டு அறிக்கையை ஆசிரியை கோமதி வாசித்தார். விளையாட்டுத்துறை ஆசிரியர் குணசேகரன் நன்றி கூறினார். விழாவில், கல்வி இயக்குனர் குணசேகர், உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி