உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இலங்கை தமிழர் முகாமில் பெயின்டிங் குறித்து பயிற்சி 

 இலங்கை தமிழர் முகாமில் பெயின்டிங் குறித்து பயிற்சி 

ஆனைமலை: ஆனைமலை அருகே, ஏசியன் பெயின்ட்ஸ் பியூட்டிபுல் ேஹாம்ஸ் அகாடமியின், (சி.எஸ்.ஆர்) சார்பில், கோட்டூர் இலங்கை தமிழர் முகாமில் பெண்களுக்கு பயிற்சி நடந்தது. அதில், அடிப்படை பெயின்டிங் பயிற்சி ஆறு நாட்களாக வழங்கப்பட்டது; 41 பெண்கள் பங்கேற்றனர். பயிற்சியாளர்கள் கூறியதாவது: அடிப்படை வண்ண பூச்சு பாடக்குறிப்பு மீது கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. இது ஓவியர்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பொருட்கள் குறித்தான பொதுஅறிவை ஏற்படுத்தும். மேற்பரப்பை தயார் செய்வது, பிரத்யோக முறைகள், வண்ணப்பூச்சு தரம் குறித்து நடைமுறை அறிவை பெறுதல், பயிற்சி அளிக்கப்பட்டது. ஓவியர்களுக்கு மேம்பட்ட அறிவும், தொழில்நுட்பங்களும் வழங்கி வாழ்வாதாரம் மேம்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும். இவ்வாறு, கூறினர். பயிற்சியில் பங்கேற்றோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பயிற்சியாளர் சண்முகராஜ், உதவியாளர் செந்தில் குமார் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ