மேலும் செய்திகள்
குப்பையில் இருந்து பரவிய தீ
15-Feb-2025
ஆனைமலை, ;ஆனைமலை அருகே, கோட்டூர் பேரூராட்சியில் துாய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோட்டூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மூன்று ஏக்கர் வண்டிப்பாதை புறம்போக்கு இடத்தில் குப்பை கொட்ட விடாமல் தனிநபர் ஒருவர் தடுத்து, குப்பை கொட்டக்கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து, கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமாபானு மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு நடத்தி, தனி நபர் தடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
15-Feb-2025