மேலும் செய்திகள்
காலமானார் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
1 hour(s) ago
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
2 hour(s) ago
ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்
2 hour(s) ago
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
3 hour(s) ago
கோவை : கோவை மாநகராட்சிப்பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரையை, அதிகளவில் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தார்.கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்தவர் ராஜாமணி, 35; டிரைவர். மனைவி புவனேஸ்வரி, 31. இவர்களது, 6 வயது மகள் தியாஸ்ரீ. சிங்காநல்லுார் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில், 1ம் வகுப்பு படித்து வந்தார். மாணவிக்கு சில நாட்களுக்கு முன், பள்ளியில் சத்து மாத்திரை கொடுத்துள்ளனர். இதனை அந்த குழந்தை, புத்தகப்பையில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது மிட்டாய் என நினைத்து, உட்கொண்டு வந்ததாக தெரிகிறது.கடந்த, 5ம் தேதி மாணவிக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. வயிற்று போக்கில் வெளியேறிய மாத்திரைகளைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையின் புத்தகப்பையை சோதனை செய்தபோது, அதில் ஏராளமான சத்து மாத்திரைகள் இருந்துள்ளன. இதையடுத்து, சிறுமியை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து, சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில், மாத்திரை வடிவில் மிட்டாய்கள் விற்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் மாத்திரைக்கும், மிட்டாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் சில சமயங்களில், மாத்திரைகளை சாப்பிடும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனை தடுக்க பெற்றோர், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாத்திரைகளை குழந்தைகளின் கையில் கிடைக்காத வகையில், பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago