உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரோட்டில் மாணவி மயங்கி விழுந்து மரணம்

 ரோட்டில் மாணவி மயங்கி விழுந்து மரணம்

பெ.நா.பாளையம்: ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் வசித்தவர் ஜனஸ்ருதி,19; மாணவி. இவரது உறவினர் கோவையில் இறந்தது தொடர்பாக ஜனசுருதி, தாயார் வினோதாவுடன் வந்துவிட்டு, காரில் ஈரோடு திரும்பி கொண்டு இருந்தார். வழியில் மேட்டுப்பாளையம் ரோடு, வீரபாண்டி பிரிவில் உள்ள தனது தோழியை பார்க்க காரை நிறுத்தினார். தோழியுடன் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஜனசுருதி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி