உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்கள் கல்லுாரி களப்பயணம் வழிகாட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது

மாணவர்கள் கல்லுாரி களப்பயணம் வழிகாட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது

உடுமலை : அரசு பள்ளி மேல்நிலை வகுப்பு மாணவர்கள், உயர் கல்வி குறித்து அறிந்து கொள்ளும் வகையில், 'கல்லுாரி களப்பயணம்' திட்டம் துவங்கியது.அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும், ஊக்குவிக்கவும், மாநில அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.அதில் ஒன்றாக, அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள், அந்தந்த பள்ளிகளுக்கு அருகிலுள்ள கல்லுாரிகளுக்கு களப்பயணமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.அங்குள்ள வசதிகள், பல்வேறு பாடப்பிரிவுகள், கட்டமைப்பு உட்பட அனைத்தும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான கல்லுாரி களப்பயணம் திருப்பூர் மாவட்டத்தில் நடக்கிறது.மாவட்ட அளவில் ஒரு பள்ளிக்கு தலா, 35 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் வீதம் மொத்தமாக, 2,660 மாணவர்கள், 76 ஆசிரியர்கள் களப்பயணம் செல்ல உள்ளனர்.உடுமலை பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வாளவாடி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், காரத்தொழுவு, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பெதப்பம்பட்டி மற்றும் ராமசந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று முன்தினம் கல்லுாரி களப்பயணம் சென்றனர்.நேற்று, உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணர், தேவனுார்புதுார், உடுக்கம்பாளையம், குமரலிங்கம், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் களப்பயணம் சென்றனர். இறுதிநாள் இன்று, குடிமங்கலம், பூளவாடி, எலையமுத்துார், ஜல்லிபட்டி மாணவர்கள் செல்கின்றனர்.உடுமலை அரசு கலைக்கல்லுாரி, பண்ணைக்கிணறு கால்நடை மருத்துவ கல்லுாரி, ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரிகளுக்கு மாணவர்களை அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ