விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் உற்சாகம்
கோவை; எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், ஐந்தாம் ஆண்டாக விளையாட்டு போட்டிகள் நடந்தன.எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் செந்துாரப் பாண்டியன், துணை முதல்வர் தமிழ் செல்வம் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், பயிற்சியாளர்கள் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில், கபடி, பூப்பந்து , எரிபந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார், ஆயிரத்து 600க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கும், வீரர்களுக்கும் முதல்வர் செந்துாரப்பாண்டியன் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். உடற்கல்வி இயக்குனர் தினகரன் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்களும் உடனிருந்தனர்.