விளையாட்டில் பரிசு குவித்த மாணவர்கள்
கோவை; கருமத்தம்பட்டி, நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், மூன்றாம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. கோவை அரசு கலைக்கல்லுாரி உதவி பேராசிரியர் மேஜர் ஜாகிர் உசேன், விழாவை துவக்கி வைத்தார். ஈகிள்ஸ், ஹாக்ஸ், பால்கன்ஸ் மற்றும் கெஸ்ட்ரல்ஸ் ஆகிய நான்கு மாணவர் அணிகளின் அணிவகுப்பு நடந்தது. 100 மீட்டர் ஓட்டம், 80 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதிக புள்ளிகள் பெற்ற பால்கன்ஸ் அணிக்கு, பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. பெற்றோர்களும் பல்வேறு போட்டிகளில் ஆர்வமாய் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் உமா, முதல்வர் நிர்மலா, உடுமலைப்பேட்டை பள்ளி முதல்வர் கவிதா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.