உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக கபடி அணிக்கு சூலுார் மாணவி தேர்வு

தமிழக கபடி அணிக்கு சூலுார் மாணவி தேர்வு

சூலுார்; சூலுாரை சேர்ந்த கல்லுாரி மாணவி, தமிழக கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சூலுாரை சேர்ந்தவர் ஹனிஷ்கா. கோவையில் உள்ள அக்ஷயா கலைக்கல்லுாரி மாணவி. கபடி வீராங்கனையான இவர், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கபடி போட்டியில், தமிழக அணி சார்பில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டத்தில், வரும், 28 ம்தேதி துவங்கி, ஜூலை 1 ம்தேதி வரை நடக்கவுள்ள போட்டிகளில் விளையாட உள்ளார்.தமிழக அணிக்காக விளையாட உள்ள ஹனிஷ்காவுக்கு, கல்லுாரி நிர்வாகத்தினர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சூலுார் மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி