உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும்

கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும்

கோவை;கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே லோக்சபா தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என, பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இதில், ஜாதிவாரி கணக்கெடுப்பை இந்தாண்டு இறுதிக்குள் நடத்த வேண்டும். கணக்கெடுப்பை கண்காணிக்க ஓ.பி.சி., அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய மேற்பார்வை குழுவை அமைக்க வேண்டும். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., கேந்திரிய வித்யாலயா ஆகிய உயர் கல்வி நிலையங்களில், என்.எப்.எஸ்., தடைகளை உடனடியாக நீக்கி ஓ.பி.சி., இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தேசிய கட்சிகள் பா.ஜ., காங்., மாநில கட்சிகள், தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கோரிக்கைகள், தீர்மானங்கள் குறித்து விளக்குவது, அவற்றை நிறைவேற்றித் தர எழுத்துபூர்வமான உறுதியை கோருவது, எந்த கட்சி உறுதி தருகிறதோ அந்த கட்சிக்கே தேர்தலில் ஆதரவு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.கூட்டமைப்பு தலைவர் ரத்தினசபாபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை