உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தமிழ் மன்ற இலக்கிய சந்திப்பு

 தமிழ் மன்ற இலக்கிய சந்திப்பு

கோவை: தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு, செம்மொழி தமிழ் மன்றம் மற்றும் மாவட்ட நூலகம் சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம் நுாலக அரங்கில் நடந்தது. இன்ஜினியர் தமிழரசன் தலைமை வகித்தார். பேராசிரியர் கீதாதயாளன் முன்னிலை வகித்தார். சிபி., ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் அரங்ககோபால், புலவர் அப்பாவு, ஜெயராமன் ஆகியோர் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்த கருத்துரை வழங்கினர். கோவை தமிழ் இலக்கியப்பாசறை பொதுச்செயலாளர் கோவை கிருஷ்ணா தலைமையில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற, சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. நுாலக அலுவலர் வித்யாபோஸ், ஒருங்கணைப்பாளர் ராஜா மற்றும் செம்மொழி மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை