உள்ளூர் செய்திகள்

தமிழ்ச் சங்க விழா

கோவில்பாளையம் : கவையன் புத்துார் தமிழ் சங்கம் சார்பில், வருகிற 11ம் தேதி (ஞாயிறு) காலை 9:30 மணிக்கு, கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லுாரியில், தமிழ் விழா நடைபெறுகிறது.முன்னாள் கல்லுாரி முதல்வர் மீனாட்சி தலைமை வகித்து பேசுகிறார். உதவி பேராசிரியர் முகமது ஆரிபுத்தின், 'துன்பம் உறவரினும் செய்க,' என்னும் தலைப்பில் பேசுகிறார்.'தமிழ் தமிழாய் பேசு' 'அறிவோம் ஒரு அரிய செய்தி' 'படித்ததில் பிடித்தது' ஆகிய தலைப்புகளில் பேசுகின்றனர்.புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. விழாவில் பங்கேற்று தமிழமுதம் பருக சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை