உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழர் பண்டிகை கொண்டாடும் ஆர்வம் குறைகிறது; பேரூராதீனம் மருதாசல அடிகள் வருத்தம்

தமிழர் பண்டிகை கொண்டாடும் ஆர்வம் குறைகிறது; பேரூராதீனம் மருதாசல அடிகள் வருத்தம்

அன்னுார்; 'பொங்கல் பண்டிகை கொண்டாடுவது குறைவது வருத்தம் அளிக்கிறது,' என பேரூராதீனம் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.அன்னுார் பாரதி சிந்தனையாளர் பணி மையம், கோவை பாரதி மூத்தோர் பாலர் அறக்கட்டளை சார்பில், பாரதி விழா, புத்தக வெளியீட்டு விழா, டாக்டர் கோவி நூற்றாண்டு விழா என முப்பெரும் விழா அன்னுாரில் நடந்தது.விழாவில் பேரூராதீனம் மருதாசல அடிகள் பேசுகையில், பாரதி பல மொழிகள் கற்றவர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை குறித்து கேட்டபோது பலரும் சுற்றுலா சென்று விட்டதாக கூறினர். தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில் ஆர்வம் குறைவது வருத்தம் அளிக்கிறது,'' என்றார்.காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன் பேசுகையில், தற்போதைய இளைஞர்கள், அரசியல்வாதிகளை பின்பற்ற வேண்டாம். இயற்கை இடர்பாடுகளை சரி செய்ய அரசியல்வாதிகள் முயற்சி செய்வதில்லை. இயற்கை இதற்கான பாடத்தை நமக்கு கற்பிக்கும். இயற்கையை பேணி காக்க அனைவரும் முன்வர வேண்டும், என்றார். பாரதி சிந்தனையாளர் பணி மைய நிறுவனர் டாக்டர் கோவி பேசுகையில், தினமும் பாரதியின் படைப்புகளை வாசிக்க வேண்டும், என்றார்.டாக்டர் கோவி எழுதிய 'சுனாமி' என்னும் நூலை, தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் வெளியிட, உலக தமிழ் சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார்.பாரதியார் உருவப்படத்தை பேரூராட்சி முன்னாள் தலைவர் சவுந்தரராஜன் திறந்து வைத்தார். கலை நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பணி மைய நிர்வாகிகள் சுப்பையன், கண்ணன் குமார், பிரபு, சாந்தமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை