உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராம சபை கூட்டம் :ஆசிரியர்கள் பங்கேற்க அறிவுரை

கிராம சபை கூட்டம் :ஆசிரியர்கள் பங்கேற்க அறிவுரை

பெ.நா.பாளையம்;தமிழக முழுவதும் ஜன., 26ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில், அந்தந்த பகுதிக்கு உட்பட்ட கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளிட்ட பல்வேறு துறையினர் கலந்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இதில், பள்ளி கல்வி சார்பில் அந்தந்த பகுதி வட்டார கல்வி அலுவலர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதில், அந்தந்த பகுதியை ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, கட்டமைப்பை உருவாக்குவது, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளி வளாக தூய்மை பணிகளை மேம்படுத்துவது, பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி