ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி ஐந்து விக்கெட்கள் வீழ்த்திய அணி வீரர்
கோவை, ; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மூன்றாவது டிவிஷன் 'என்.தாமோதரன் வெல்பேர் டிரஸ்ட் டிராபி', ஸ்ரீ சக்தி மைதானத்தில் நடக்கிறது. இதில், ரெட் டயமண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், ஸ்ரீ சக்தி ஐ.இ., மற்றும் டெக்., கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.முதலில் பேட்டிங் செய்த ரெட் டயமண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, 50 ஓவரில் ஏழு விக்கெட்களுக்கு, 211 ரன்கள் எடுத்தது. அணி வீரர்களான ரோசன் ஜெபக்குமார், 30 ரன்கள், அரவிந்த், 37 ரன்கள், சுரேஷ், 46 ரன்கள், சூர்ய நிரஞ்சன், 39 ரன்களும் எடுத்தனர்.அடுத்து விளையாடிய, ஸ்ரீ சக்தி அணியினர், 38.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 111 ரன்கள் எடுத்தனர். வீரர்களான சபரி ஹரிஹரன், 38 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் விசாக் மோகன்ராஜ் மற்றும் சூர்ய நிரஞ்சன் ஆகியோர், தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.ஐந்தாவது டிவிஷன் 'எக்கர் பம்ப்ஸ் டிராபி' போட்டியில், சன் ஸ்டார் அணியும், கோயம்புத்துார் ரெய்டர் கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின. பேட்டிங் செய்த சன் ஸ்டார் அணி, 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 213 ரன்கள் எடுத்தது.வீரர்களான தமிழரசு, 45 ரன்களும், குணசேகரன், 37 ரன்களும், லட்சுமிகாந்த், 37 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் நிர்மல்ராஜ் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய கோயம்புத்துார் ரெயிடர் கிரிக்கெட் அகாடமி அணியினர், 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 215 ரன்கள் எடுத்தனர்.வீரர்களான பாக்கியராஜ், 57 ரன்களும், கோகுல், 48 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் கிருஷ்ணகுமார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். ஆறாவது டிவிஷன் 'கே.வி.ராமச்சந்திரன் செட்டியார் டிராபி' போட்டியில், கோவை புளூ நைட்ஸ் அணியும், எம்.எம். கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.பேட்டிங் செய்த, கோவை புளூ நைட்ஸ் அணி, 39.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 164 ரன்கள் எடுத்தது.அணி வீரர் பூர்ணசந்திரன், 79 ரன்கள் விளாசினார். எம்.எம். கிரிக்கெட் கிளப் அணியினரோ, 46.4 ஓவரில் ஏழு விக்கெட்டுக்கு, 165 ரன்கள் எடுத்தது. வீரர் ரமேஷ்சந்திரன், 78 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் அருண் பாண்டி ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார்.