படைப்பாற்றலை ஊக்குவித்த டெக் விசி
கோவை; ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழிநுட்பக் கல்லுாரியில், 'டெக் விசி' எனும் தலைப்பில், புராஜக்ட் போட்டிகள் நடந்தன. ஸ்ரீ சக்தி நிறுவனத்தின் தலைவர் தங்க வேலு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பிவைவிஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரஞ்சித்குமார் பங்கேற்றார். சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கிடையேயான, இந்த சிறப்பு தொழில்நுட்ப போட்டியில் தமிழகம் முழுவதிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் வாயிலாக, நிஜ வாழ்க்கை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இளம் புதுமையாளர்களை ஊக்குவிக்கும் தளமாக அமைந்தது. மாணவர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில், ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ரூ. 6 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.