உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குமரன் குன்று கோவிலில் தைப்பூச தேரோட்டம்

குமரன் குன்று கோவிலில் தைப்பூச தேரோட்டம்

அன்னுார்;குமரன்குன்று கோவில் தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. மத்திய இணையமைச்சர் முருகன் பங்கேற்றார்.குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி கிரிவலம் 23ம் தேதி வரை நடந்தது. 24ம் தேதி இரவு அம்மன் அழைப்பு நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று மாலை 5.30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. மத்திய இணையமைச்சர் முருகன், பா.ஜ., மாவட்ட தலைவர் சங்கீதா, மாவட்ட செயலாளர் ஜெயபால் உள்பட பலர் பங்கேற்றனர்.அன்னுார், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை பகுதிகளை சேர்ந்த பல்லாயிரம் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஜமாப் இசைக்கு ஏற்ப பலர் நடனமாடினர். பக்தர்கள் பலர், நீர் மோர் மற்றும் உணவு வழங்கினர். இரவு 7:35 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.கல்யாண சுப்பிரமணியசாமி சன்னதியில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இன்று காலை 10:00 மணிக்கு பஜனை, சன்னதியில் காவடி செலுத்தும் நிகழ்ச்சி, இரவு 9:00 மணிக்கு பரிவேட்டை நடக்கின்றன. 27ம் தேதி இரவு தெப்போற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி