தம்பு மழலையார் பள்ளி விளையாட்டு விழா
பெ.நா.பாளையம்; பிரஸ்காலனி தம்பு மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா நடந்தது. பள்ளியின் செயலாளர் அபர்ணா கார்த்திகேயன் வரவேற்றார். விழாவையொட்டி நடந்த விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் ஓட்டப்போட்டி, யோகாசனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.