மேலும் செய்திகள்
கோவை பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர்
29-Dec-2025
கோவை: நமது நாட்டில் பசுமை புரட்சியை ஏற்படுத்தியவர், சி.எஸ்., என்றழைக்கப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் சி.சுப்ரமணியம். பொள்ளாச்சி செங்குட்டைபாளையத்தை பூர்வீகமாகக் கொண்டவர். பல்வேறு துறைகளில் பதவி வகித்தவர். மஹாராஷ்டிராவில் கவர்னராகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் ஆற்றிய பணிகளை மக்களின் கவனத்துக்கு சேர்ப்பிக்க, கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ண ராஜ் வாணவராயர், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதையேற்ற முதல்வர், உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு, 'சி.சுப்ரமணியம் மேம்பாலம்' என பெயர் சூட்டி அறிவித்தார். கோவை வந்த முதல்வரை கிருஷ்ணராஜ் வாணவராயர், அவரது மகன் சங்கர் வாணவராயர், மருமகன் ராஜ்குமார் ஆகியோர் சந்தித்து, பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
29-Dec-2025