உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாரி டிரைவரை தாக்கிய பஸ் டிரைவர் சிக்கினார்

லாரி டிரைவரை தாக்கிய பஸ் டிரைவர் சிக்கினார்

மேட்டுப்பாளையம்;லாரி டிரைவரை தாக்கிய பஸ் டிரைவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.காரமடையை சேர்ந்தவர் அழகர்சாமி, 29. லாரி டிரைவர். இவர் கிருஷ்ணசாமி சந்தில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவர் அறைக்கு மது அருந்த சென்றார். அங்கு ஏற்கனவே பஸ் டிரைவர் மூர்த்தி, 61, சங்கர் ஆகியோர் இருந்தனர்.பின் அழகர்சாமி, மூர்த்தி, பாலகிருஷ்ணன், சங்கர் ஆகிய நால்வரும் இணைந்து மது அருந்தினர். அப்போது மூர்த்திக்கும் அழகர்சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மூர்த்தி தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து அழகர் சாமியை தாக்கினார். இதில் அழகர்சாமியின் தலையில் காயம் ஏற்பட்டது. புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார், மூர்த்தியை கைது செய்தனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை