மேலும் செய்திகள்
அதிகரிக்கும் பஸ் ஸ்டாப்களால் ஊழியர்களுடன் தகராறு
17-Dec-2024
மேட்டுப்பாளையம் :பொங்கல் விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, திருப்பூர், ஊட்டி, மதுரை, சிவகாசி, தஞ்சாவூர், ராஜபாளையம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை அடுத்து கூடுதலாக 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதனிடையே, பொங்கலையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதே போல் பொங்கல் விடுமுறையை கொண்டாட ஊட்டி, கோத்தகிரி செல்வதற்காக சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் குவிந்தனர். இதனால் பஸ் ஸ்டாண்டு முழுவதும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மதுரை, ஊட்டி செல்லும் பஸ்கள் முழுவதும் நிரம்பின. பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் வருவதற்கு முன்பாகவே, பயணிகள் ஓடி போய் பஸ்களில் ஏற முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து, பஸ் நின்ற பிறகு விரிசையில் நின்று ஏற அனுமதித்தனர்.---
17-Dec-2024