உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.8 கோடியில் யானைகள் முகாம்: டெண்டர் கோரியது வனத்துறை

ரூ.8 கோடியில் யானைகள் முகாம்: டெண்டர் கோரியது வனத்துறை

கோவை:கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட சாடிவயலில், யானைகளுக்கான முகாம் இருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த முகாம், பொலிவு இழந்தது. இதையடுத்து புதிய யானைகள் முகாம் அமைக்க வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் புதிய முகாம்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து இதற்காக ரூ.8 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. புதிய முகாமில், யானை கொட்டகைகள், கால்நடை மருத்துவ வசதிகள், சமையலறை, மற்றும் யானை புகா அகழிகள், யானைகளுக்கான உணவு, தண்ணீர் வசதிகள், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதன் வாயிலாக யானைகளுக்கான பாதுகாப்பு முயற்சிகள் வலுபடுத்தப்பட உள்ளன.இந்நிலையில், புதிய முகாம் அமைப்பதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. புதிய முகாம் அமைப்பதற்கான டெண்டரை வனத்துறை கோரியுள்ளது. ஒப்பந்தத்தை கோர ஏராளமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ