மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
4 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
4 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
4 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
4 hour(s) ago
கோவை;மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள, கோவை, போத்தனுார் ரோட்டில் எட்டு இடங்களில் குழி இருந்தது; மழை பெய்தபோது, வடிகாலில் வடியாமல் தேங்கியதற்கான காரணம் தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று கூட்டாய்வு செய்தனர்.கோவை - பொள்ளாச்சி ரோட்டில், குறிச்சி பிரிவில் இருந்து போத்தனுார் சந்திப்பு வரை, 2.6 கி.மீ., துாரம் இரு வழிச்சாலையாக இருந்தது. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால், மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, ரூ.13 கோடியில், நான்கு வழிச்சாலையாக விஸ்தரித்தனர்.ஆனால், கடைசி பகுதி வரை மழை நீர் வடிகால் கட்டவில்லை. இடைப்பட்ட இடங்களில், மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் இருப்பதாக கூறி, இடைவெளி விடப்பட்டு இருக்கிறது. சாலையில்தண்ணீர் தேக்கம்
இதன் காரணமாக, சமீபத்தில் பெய்த மழைக்கு, வடிகாலில் தண்ணீர் செல்லாமல், ரோட்டில் தேங்கியது. இது, அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியது. ரோட்டில் தண்ணீர் தேங்கிய காட்சிகளை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பினர். போத்தனுார் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்றாமல், தரமின்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் குற்றம் சுமத்தியிருந்தனர். இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு, விரிவாக கடிதம் அனுப்பியிருந்தனர்.இச்சூழலில், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நகர பொறியாளர் அன்பழகன், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேஷ் உள்ளிட்டோர் நேற்று கள ஆய்வு செய்தனர். எட்டு இடங்களில் பள்ளம், குழி இருந்தது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் கசிவு காரணமாக, ரோட்டில் பள்ளம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
மாநகராட்சி தரப்பில் குடிநீர் கசிவு சரி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இரு இடங்களில் தொடர்ந்து தண்ணீர் கசிந்து வருகிறது; அதை உடனடியாக சீரமைக்க, மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார். ரோட்டின் ஓரத்தில் தேங்கியிருந்த தண்ணீர் கடந்து செல்ல, ரோட்டின் குறுக்கே கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறை தளர்வு செய்தபின், டெண்டர் கோரி, மாநகராட்சியே அப்பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.கசிவு ஏற்பட்ட இடங்களை சீரமைக்கும் பணியை, மாநகராட்சியே மேற்கொள்ளவும், 'கல்வெட்டு' அமைத்துள்ள இடத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை, நெடுஞ்சாலைத்துறை மேற் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.கசிவு ஏற்பட்ட இடங்களை மாநகராட்சி சீரமைத்த பின், மாநில நெடுஞ் சாலைத்துறை 'பேட்ச் ஒர்க்' செய்யவுள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேஷ் கூறுகையில், ''மாநகராட்சியால் ஏற்கனவே கட்டப்பட்ட மழை நீர் வடிகால் இருக்கிறது. அதனால், இடைவெளி விட்டு கட்டியிருக்கிறோம். பழைய கல்வெட்டு பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்களால் அடைப்பு ஏற்பட்டிருப்பதால், தண்ணீர் தேங்கியது. மெஷின் வைத்து மாநகராட்சி அலுவலர்கள் அகற்றி வருகின்றனர். 2021ல் போடப்பட்ட மதிப்பீடு; ஏற்கனவே இருந்த மழை நீர் வடிகாலை விட்டு விட்டு, மதிப்பீடு தயாரித்திருக்கின்றனர்,'' என்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago