உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பக்தர்கள் சூழ நடந்த திருவிளக்கு வழிபாடு 

பக்தர்கள் சூழ நடந்த திருவிளக்கு வழிபாடு 

கோவை; ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கத்தின், 75வது ஆண்டு விழா, ஆர்.எஸ்.புரம், பலிஜ நாயுடு கல்யாண மண்டபத்தில், கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது.நேற்று கணபதிஹோமம், ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆவாஹனம், மஹன்யாச ருத்ரஜபம் ஆகியவை நடந்தது. காலை 7:00 மணிக்கு விஷ்ணு விஜயன் குழுவினரின் நாதஸ்வர தவில் இசை நடந்தது. 9:00 மணிக்கு பக்தர்கள் சூழ திருவிளக்கு வழிபாடு நடந்தது. மாலை 3:00 மணி வரை, ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி ஹாலில் பக்தர்களுக்கு மஹாஅன்னதானம் வழங்கப்பட்டது. திரளான ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை