கோ வை மாவட்டத்தில், கோவை வடக்கு, தெற்கு, பேரூர், மதுக்கரை, அன்னுார், சூலுார், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, மேட்டுப்பாளையம், வால்பாறை என, பரந்த நிர்வாக அமைப்பை இன்று தனித்தனி அலுவல கங்களில் நாம் காண்கிறோம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், இந்த அனைத்து நிர்வாகங்களும், ஒரே கட்டடத்தின் கீழ் செயல்பட்டன என்பது பலருக்கும் தெரியாது உண்மை. இன்று ராஜவீதியில் அமைந்துள்ள பெண்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளி கட்டடம் தான் அந்த வரலாற்றுச் சின்னம். கடந்த 1760களில் கோயம்புத்துார் மைசூர் ஆட்சிக்குள் இருந்தது. அப்போது, ஹைதர் அலியின் பிரதிநிதியாக குறிக்கார மாதையன் எனும் அதிகாரி, நாற்பது ஆண்டுகள், கோவை ஆட்சியை மேற்கொண்டார். அவர் தங்கி ஆட்சி செய்ய, அழகான அரண்மனையை கட்டினார். அந்த மாளிகையே அக்காலத்தில் 'மாதே ராஜா மஹால்' எனப் பெயர் பெற்றது. மைசூர் பாணிக் கட்டடக் கலையால் வடிவமைக்கப்பட்ட அந்த மாளிகை, கோட்டையை ஒத்த திடக்கட்டுமானம் கொண்டதாக இருந்தது. பின், பிரிட்டிஷ் ஆட்சி வந்தபோது, இந்த மாளிகை நிர்வாக அலுவலகமாக மாற்றப்பட்டது. வருவாய்த் துறையை மையமாகக் கொண்டு கிராமங்களை மணியகாரர்கள் (இன்றைய வி.ஏ.ஓ.), பிர்காக்களுக்கு வருவாய் ஆய்வாளர்கள், தாலுக்காக்களை தாசில்தார்கள், கோட்டங்களை ஆர்.டி.ஓ., மாவட்டத்தை கலெக்டர் ஆகியோர் நிர்வகிக்கும் அமைப்பு, அக்காலத்தில் இந்தக் கட்டடத்தில் இருந்தே இயங்கியது. இன்றும் அதே நிர்வாக முறை தொடர்கிறது. பல வருடங்கள், கோ யம்புத்துாரின் நிர்வாக இதயமாக இருந்த அந்த மாளிகை, இன்று, பெண்கள் ஆசி ரியர் பயிற்சி பள்ளி கட்டடம், ஒருகாலத்தில் கோயம்புத்தூரின் முழு ஆட்சியும் இயக்கிய 'ராஜா மஹால்' என்பது, நகரின் மறைந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளில் ஒன்றாகும்.