போட்டோ எடுத்த போலீஸ் சஸ்பெண்ட்
கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில், போக்குவரத்து தலைமை காவலராக இருந்தவர் பாலமுருகன், 40. கடந்த 18ம் தேதி இரவு, சாய்பாபா காலனியில் நின்று கொண்டிருந்த செவிலியர்களை தன் மொபைல் போனில், படம் பிடித்தார்; பெண்கள் சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள், பாலமுருகனை துரத்தி பிடித்தனர். விசாரணை நடத்திய மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன், அவரை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்தார். வடக்கு துணை கமிஷனர் ஸ்டாலின், பாலமுருகன் குறித்து விசாரித்தார். அவர் அளித்த அறிக்கை படி, கமிஷனர், நேற்று பாலமுருகனை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.