உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வானம் லேசான தூறல் போடும்!

வானம் லேசான தூறல் போடும்!

கோவை; வரும் 11ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் மேகமூட்டத்துடன், லேசான மழை பெய்யக்கூடும் என, கோவை வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இன்று முதல் வரும் 11ம் தேதி வரை, மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தூறல் அல்லது லேசான மழையை எதிர்பார்க்கலாம். ஒத்தி வைத்திருந்த உரமிடல், களையெடுப்பு மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மழையில்லா நேரத்தில் முடித்துக் கொள்ளவும், என, வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி