உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டி.கோட்டாம்பட்டி கோவில்களில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

டி.கோட்டாம்பட்டி கோவில்களில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி, டி.கோட்டாம்பாட்டி உச்சி மாகாளியம்மன் கோவில் மற்றும் தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி உச்சி மாகாளியம்மன் கோவில் மற்றும் தண்டுமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 11ம் தேதி நோம்பு சாட்டுதலுடன் துவங்கியது. தெய்வகுளம் காளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருதல், விநாயகருக்கும் அம்மணீஸ்வரருக்கும் தீர்த்தம் இடுதல் மற்றும் அபிேஷக ஆராதனை நடந்தது.உச்சிமாகாளியம்மன் கோவிலில் நாளை, மாலை, 6:00 மணிக்கு பூவோடு மற்றும் சக்தி கும்பம் முத்தரித்து ஊர்வலம் வருதல், வரும், 19ல், காலை, 5:00 மணிக்கு தீர்த்தம் இடுதல், காலை, 6:30 முதல் 7:30 மணிக்குள் திருக்கல்யாணம் மற்றும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், வரும், 21ல், உச்சிக்காளியம்மன் ரதம் ஊர்வலம் வருதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா, மாலை, 6:00 அபிேஷக ஆராதனைகள் நடைபெறும்.* தண்டுமாரியம்மன் கோவிலில், வரும், 25ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, தண்டுமாரியம்மனுக்கு பூவோடு மற்றும் சக்தி கும்பம் முத்தரித்து ஊர்வலம் வருதல், 26ம் தேதி காலை, 5:00 மணிக்கு தீர்த்தம் இடுதல், காலை, 6:00 முதல், 7:30 மணிக்குள் திருக்கல்யாணம் மற்றும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 28ம் தேதி, காலை, 8:00 மணிக்கு ரதம் ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு, மாலை, 6:00 மணிக்கு அபிேஷக ஆராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை