உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன விபத்தால் சிக்கிய திருடர்கள்

வாகன விபத்தால் சிக்கிய திருடர்கள்

கிணத்துக்கடவு: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வாஞ்சிநாதன், 23, மற்றும் 17 வயது சிறுவன் இருவரும், பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு ஏழூர் பிரிவு அருகே, பைக்கில் சென்றனர். அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.இதையடுத்து, அங்கிருந்தவர்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், அவர்களை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்த இருவரிடம் போலீசார் விசாரித்த போது, அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பது தெரியவந்தது.மேலும், இருவர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளதா என ஆய்வு செய்ததில், சேலம், திருப்பூர், கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பைக், மொபைல்போன், நகை பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ