உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடிப்படை வசதிகளுக்காக காத்திருக்கிறது தில்லை நகர்

அடிப்படை வசதிகளுக்காக காத்திருக்கிறது தில்லை நகர்

போத்தனூர் : செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தில்லை நகரில், அடிப்படை வசதிகளுக்காக குடியிருப்போர் காத்திருக்கின்றனர்.போத்தனூர் அடுத்த செட்டிபாளையம் பேரூராட்சியின் முதலாவது வார்டில், தில்லை நகர் உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. பள்ளிகளும் செயல்படுகின்றன. இப்பகுதியில் இதுவரை, குடிநீர் வசதி செய்யப்படவில்லை. சாலை மற்றும் தெரு மின்விளக்கு வசதிகளும் கிடையாது,இதனால் இரவு நேரத்தில், பெண்கள் வெளியே செல்லவே தயங்குகின்றனர். அதற்கு தகுந்தாற்போல் சிலர் கும்பல், கும்பலாக சாலையிலேயே அமர்ந்து மது குடிக்கின்றனர். இதுகுறித்து யாரேனும் கேட்டால், தகராறில் ஈடுபடுகின்றனர். திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளன.அப்பகுதியினர் கூறுகையில், 'இப்பகுதியில் சாலை, குடிநீர், தெரு மின்விளக்கு என அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. கேன் தண்ணீர் வாங்கிதான் பயன்படுத்துகிறோம். சாலைகளில் மெட்டல் மட்டும் இருப்பதால், வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் பலனில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ