உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருக்குறள் விருது விழா; மாணவர்களுக்கு அறிவுரை

திருக்குறள் விருது விழா; மாணவர்களுக்கு அறிவுரை

ஆனைமலை;ஆனைமலை வி.ஆர்.டி., அரசுப்பள்ளியில், திருக்குறள் ஆர்வலர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஆனைமலை வி.ஆர்.டி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் முக்கூடல் விழா மற்றும் படிகள் படிப்பகம் சார்பில், திருக்குறள் ஆர்வலர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சுதா தலைமை வகித்தார். முதுகலை தமிழ் ஆசிரியர் மகாலட்சுமி வரவேற்றார். ஆசிரியர் ஜெயக்குமார், அறிமுக உரையாற்றினார்.கவிஞர் அறவொளி பேசுகையில், ''மாணவர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பதுடன், விடா முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தாய், தந்தையரை மதிக்க வேண்டும். வாழ்வில் நாம் திருக்குறளை பின்பற்ற வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, 1,330 திருக்குறள்கள் எழுதிய ஏழாம் வகுப்பு மாணவி மனிஷாவுக்கு, சான்றிதழும் கேடயமும் ரொக்க பரிசும், படிகள் படிப்பக நிர்வாகி பூங்கொடி வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விமலாதேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி