மேலும் செய்திகள்
விநாயகர் கோவிலில் 27ல் கும்பாபிஷேகம்
23-Aug-2025
நெகமம் ; நெகமம், ஆதிபராசக்தி அம்பிகை கருப்பண்ணசுவாமி கோவிலில், நாளை 4ம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. நெகமம், ஆதிபராசக்தி அம்பிகை கருப்பண்ணசுவாமி கோவிலில், திருக்குட நன்னீராட்டு விழா நிகழ்ச்சி இன்று 3ம் தேதி துவங்குகிறது. இதில், காலை 9:15 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாடு, காப்பு கட்டுதல் உள்ளிட்டவைகள் நடக்கிறது. காலை 10:45 மணிக்கு, கோபுர கலசங்கள் நிறுவுதல் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு முளைப்பாளிகை மற்றும் தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு, முதற்கால வேள்வி வழிபாடு, 108 மூலிகை திரவியாஹுதி, வேள்வி நிறைவு, மலர் வழிபாடு, திருமுறை விண்ணப்பம், எண் வகை மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை, 4ம் தேதி, காலை 5:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை நடக்கிறது. காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, திருக்குடங்கள் புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை 7:30 மணிக்கு, திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. காலை 9:30 மணிக்கு, பெருந்திருமஞ்சனம், அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடக்கிறது. திருக்குட நன்னீராட்டு விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
23-Aug-2025