உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொடிசியாவை கலக்கும் மூன்று கண்காட்சிகள்!

கொடிசியாவை கலக்கும் மூன்று கண்காட்சிகள்!

கோவை : அவிநாசி ரோடு, கொடிசியாவில் கட்டுமானம், வீடு, மனை மற்றும் பர்னிச்சர் ஆகிய மூன்று கண்காட்சிகள், ஒரே நேரத்தில் நடந்து வருகிறது.கட்டுமான கண்காட்சியில், ஆர்க்கிடெக்ட், பில்டிங் மற்றும் இன்டீரியர் துறைகளுக்கான நுாறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய கருவிகள், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், கட்டுமான முறைகள், ரசாயனங்கள், எலக்ட்ரிக் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள், வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிராப்பர்டி எக்ஸ்போவில், 45க்கும் மேற்பட்ட பிரபல பில்டர்கள், புரோமோட்டர்கள் பங்கேற்கின்றனர். நம்பமுடியாத தள்ளுபடி விலையில், அபார்ட்மென்டுகள், தனி வீடுகள், வில்லா டைப் வீடுகளுடன், மனைப்பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன. உடனடி வங்கி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.80 அரங்குகள் கொண்ட பர்னிச்சர் கண்காட்சியில், உயர்தர வெளிநாட்டு, உள்நாட்டு பர்னிச்சர் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. நாளை வரை நடக்கும் கண்காட்சிகளை, காலை 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை பார்வையிடலாம். விபரங்களுக்கு, 95661 87502 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ