வக்கீலுக்கு மிரட்டல் மூவர் சிறையிலடைப்பு
கோவை, ; கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 41; சக்திசேனா இந்து மக்கள் இயக்க வக்கீல் பிரிவு மாநில அமைப்பாளர். இவருடைய அலுவலகத்தில் அனிதா என்பவர் பணிபுரிந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவரை மணிகண்டன் பணியில் இருந்து நீக்கினார். அனிதா சிலருடன் சேர்ந்து மணிகண்டன், அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மணிகண்டன் ராமநாத புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணையில், கூலிப்படையை சேர்ந்த சிலருடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தது தெரிந்தது. போலீசார், ஈச்சனாரியை சேர்ந்த அருண்குமார், 35, செல்வபுரத்தை சேர்ந்த சிக்கந்தர்பாஷா, 33, யாசர் அராபத் பஷீர், 33 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, கார் பறிமுதல் செய்யப்பட்டன. அனிதா உட்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.