உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூட்டிய அறையில் சிக்கிய மூவர் மீட்பு

பூட்டிய அறையில் சிக்கிய மூவர் மீட்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், பூட்டிய அறையில் சிக்கிக்கொண்ட மூவரை, கதவை உடைத்து தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.பொள்ளாச்சி, குமரன் நகரில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் பாட்டி, அம்மா, மகன் என, மூன்று பேர் நேற்று முன்தினம் வழக்கம் போல, 'பெட்ரூம்'க்கு சென்று துாங்கச் சென்றனர். நேற்று காலை வழக்கம் போல எழுந்து கதவை திறந்த போது, திறக்க முடியாமல் திணறினர். முயற்சி செய்தும் திறக்க முடியவில்லை.இதையடுத்து, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று மூவரையும் மீட்டனர். வீட்டு அறையில் சிக்கிக்கொண்ட சிறுவன், 7ம் வகுப்பு படிப்பதால், தேர்வுக்கு தயாராக இருந்த நேரத்தில் கதவை உடைத்து மீட்டு பள்ளிக்கு அனுப்பி வைத்த, தீயணைப்புத்துறையினருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !