உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி

திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நஞ்சுண்டேஸ்வரி நகரில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்தது.நஞ்சுண்டேஸ்வரி நகர் குடியிருப்பு நல சங்கத்தில் ஸ்ரீமாந் டிரஸ்ட் சார்பில், திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்தது. இதில், திரளான குழந்தைகள் பங்கேற்று, திருப்பாவை பாசுரங்களை ஒப்புவித்தனர். மேலும், குழந்தைகள் ஆண்டாள், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் மற்றும் சகுந்தலை வேடங்களில் தோன்றி பார்வையாளர்களை கவர்ந்தனர். நிகழ்ச்சியில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை