உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டெங்கு காய்ச்சலை தடுக்க வீடுகளில் தண்ணீர் தேங்க விடாதீர்: கலெக்டர்

டெங்கு காய்ச்சலை தடுக்க வீடுகளில் தண்ணீர் தேங்க விடாதீர்: கலெக்டர்

தொண்டாமுத்தூர்: உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம், கிராம ஊராட்சிகளில் நேற்று நடந்தது. தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நரசீபுரம் ஊராட்சியில் நடந்த உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு வங்கிக் கடன், கர்ப்பிணிகளுக்கு பெட்டகம், விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பில், தார்ப்பாய் மற்றும் ஸ்பிரேயர் உள்ளிட்டவற்றை வழங்கினார். அதோடு, ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி கவுரவித்தார். இதில், கூடுதல் கலெக்டர் சங்கீத் பல்வந்த் வாகே மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில், எப்பொழுதும் மழை பெய்கிறது. மழை காலத்தில், டெங்கு காய்ச்சல் அதிகம் பரவும். எனவே, பொதுமக்கள் வீட்டின் வெளியே தண்ணீர் தேங்காமல் வைத்துகொள்ள வேண்டும். ஊராட்சிகளில், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர், தார்சாலை, தெருவிளக்கு ஆகிய பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை