உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நடை பயணம்

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நடை பயணம்

அன்னுார்; கோவில்பாளையத்தில் நடந்த, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நடை பயணத்தில், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கோவில்பாளையம் அருகே கொண்டையம்பாளையத்தில் அமைந்துள்ள குகா பேண்டஸி குடியிருப்போர் நல சங்கத்தினரும், குரும்பபாளையத்தில் அமைந்துள்ள குமரன் மருத்துவமனையும் இணைந்து, கோவில் பாளையத்தில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியை நடத்தினர். கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், நடை பயணத்தை துவக்கி வைத்தார். குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை