மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
29-Mar-2025
ஜெய் மாருதி அறநிகழ்வு நற்பணி அறக்கட்டளை சார்பில், கவுண்டம்பாளையம், கிரி நகர், 'வாதசல்யம்' மூத்தோர் மகிழ்விடத்தில், ஸ்ரீ ராமநவமி மகோற்சவம் நடக்கிறது. காலை, 9:00 மணி முதல், சீதாகல்யாணம், மதியம், 1:00 மணிக்கு, அன்னதானம் நடக்கிறது. மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை, திருப்புகழ் இசை வழிபாடு, பிரசாத விநியோகம் ஆகியவை நடக்கிறது. பங்குனி உத்திரத் திருவிழா
மேலைச் சிதம்பரம் எனும் போற்றப்படும், பேரூர் பட்டீசுவரசுவாமி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா நடக்கிறது. இன்று காலை, 9:00 மணிக்கு, யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு, யாகசாலை பூஜை, இரவு, 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனக் காட்சி, அறுபத்து மூவர் அருட்காட்சி அதிமூர்க்கம்மன் அரண்மனை திருவிளக்கு ஆகியவை நடக்கிறது. சீதாகல்யாணம்
சவுரிபாளையம், ராஜீவ்காந்தி நகர், ராஜ கணபதி விநாயகர் கோவிலில், ராமநவமி உற்சவம் நடக்கிறது. காலை, 7:00 முதல் 10:30 மணி வரை, ராமர் மூலவர் உற்சவர் சிறப்பு திருமஞ்சனம், ராம நவமி விசேஷ ஹோமம்,சங்கல்பம், பூர்ணாஹுதி, கும்ப புரோக்சனம், சடாரி, தீர்த்த பிரசாத கோஷ்டி ஆகியவை நடக்கிறது. மாலை, 4:00 மணி முதல், சீர்வரிசை புறப்பாடு, ராம நாம சங்கீர்த்தனம், சீதா கல்யாணம் மற்றும் ராமர் பட்டாபிஷேகம் நடைபெறும். புத்தக வெளியீட்டு விழா
பள்ளிக் கல்வி சேவையில், நற்பணியாற்றுபவர்களை அங்கீகரிக்கும் வகையில், நவக்கரை, ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரி சார்பில், விஞ்ஞானி லால் மோகன் நினைவு விருதுகள் வழங்கும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. கல்லுாரி வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. கம்ப ராமாயண சொற்பொழிவு
அன்னுார், ஸ்ரீதேவி பூதேவி, கரிவரதராஜ பெருமாள் கோவில், 20ம் ஆண்டு ராமநவமி விழா நடக்கிறது. மாலை, 5:00 முதல் ராமர் பிறப்பு ஊஞ்சல் சேவை மற்றும் சொற்பொழிவு நடக்கிறது. சொற்பொழிவாளர் மகேஸ்வரி, கம்பராமாயணம் குறித்து தொடர் சொற்பொழிவாற்றுகிறார். சாய்பாபா ஜென்ம தின விழா
போத்தனுார், யோக சாய்பாபா கோவிலில், ராம நவமி மற்றும் சாய்பாபா கோவிலில் ஜென்ம தின விழா நடக்கிறது. காலை, 5:00 மணி முதல் சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும், நாள் முழுவதும் அன்னதானமும் நடக்கிறது. காலை, 10:30 முதல் 12:00 மணி வரை, பரதநாட்டியமும் நடக்கிறது. ஸ்ரீ ராம ஜனனம்
ஆர்.எஸ்.புரம், பொன்னுரங்கம் வீதி, லலிதா நிவாசில், ராமநவமி மகோற்சவம் நடக்கிறது. காலை, 7:00 முதல் 10:00 மணி வரை, ராம ஜனனம், சீதா கல்யாணம் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, ஸ்ரீமத் ராமாயண சொற்பொழிவு இரவு, 9:00 மணிக்கு நடக்கிறது. இலக்கியச் சந்திப்பு
கோவை மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசகசாலை இணைந்து, 46வது இலக்கியச் சந்திப்பு நிகழ்வை நடத்துகின்றன. எழுத்தாளர்கள் சுரேந்திரனின் 'சொர்க்கவாசல்', ரேவதியின் 'காதல் பிசாசே', மஞ்சுளா தேவியின் 'வசிட்டர்' ஆகிய நுால்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்வு நடக்கிறது. மகளிர் சங்கமம்
அகில பாரத பிராமணர் சங்கம் சார்பில், அனைத்து மகளிர் சங்கமம் எனும் மகளிர் தின விழா நடக்கிறது. வடவள்ளி பேருந்து நிலையம் எதிரில் உள்ள, சக்தி காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் விழா நடக்கிறது. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை ஆடல், பாடல் என கொண்டாடி மகிழ பல்வேறு கலை நிகழ்வுகள் நடக்கின்றன. சாதனைப் பெண்கள் பலர் நிகழ்வில் சிறப்புரையாற்றுகின்றனர். பட்டமளிப்பு விழா
நவக்கரை, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில், 13வது பட்டமளிப்பு விழா கல்லுாரி அரங்கில் காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. கோர் டெக்னாலஜிஸ் குளோபல் தலைவர் தினகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார். அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம்மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது. சமஸ்கிருத வகுப்புகள்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 மணி முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது. குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது. கலிக்கம் சிகிச்சை முகாம்
வள்ளலார் வைத்தியசாலை, செங்கோல் சபை, திருப்பூர் கண்டியன் கோவில் சார்பில், இலவச கண் - கலிக்கம் சிகிச்சை முகாம் நடக்கிறது. அன்னுார், சரவணா மஹாலில், காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடக்கிறது.
29-Mar-2025