மேலும் செய்திகள்
வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு
6 minutes ago
ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி
7 minutes ago
வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
7 minutes ago
கோவைக்கு கிடைத்தது விருது
8 minutes ago
ஓவியக் கண்காட்சி தனித்துவமிக்க ஓவியக் கலையான நெருப்பு ஓவியக் கண்காட்சி, அவிநாசி ரோடு, டி.சி. ஆர்ட் கேலரியில் காலை 11 முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. ஓவியர் வசந்தகுமார் தனது நெருப்பு ஓவியப்படைப்புகளை காட்சிப்படுத்துகிறார். மருத்துவ முகாம் நேரு நகர், சம்ருதா கிளினிக்கில், இலவச நரம்பு கோளாறு கண்டறியும் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடக்கிறது. காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் முகாமில், தோல் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வும், மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு பரிசுகள் சத்ய சாயி சேவா நிறுவனங்கள் மற்றும் ராம்நகர், சத்யா சாயி சேவா சமிதி சார்பில், சாய்பாபா நுாற்றாண்டு விழா வைபவத்தை முன்னிட்டு, குழந்தைகளுக்கு பள்ளி பாட புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ராம்நகர் வளாகத்தில் மதியம், 12 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. கண்ணதாசன் பாட்டுச் சித்தன் பி.எஸ்.ஜி., வானவில் சார்பில் ஆன்மிக இலக்கியத் தொடர் சொற்பொழிவு, பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில், மாலை 5 மணி முதல் நடக்கிறது. மாலை, 5.30 மணிக்கு கலை நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு, 'கண்ணதாசன் ஒரு பாட்டுச் சித்தன்' என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடக்கிறது. ஹரிகதை ஆர்.எஸ்.புரம், பாரதீய வித்யா பவன் சார்பில், ஹரிகதை நிகழ்ச்சி, மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. 'குலசேகரர் கண்ட ராமன்' என்ற தலைப்பில் ஆராவமுதாச்சாரியார் உரையாற்றுகிறார். நாட்டிய நிகழ்ச்சி ஸ்ரீ நாட்டிய நிகேதன் சார்பில், 25வது நிருத்ய சந்தியா என்ற தலைப்பில் நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நவஇந்தியா, இந்துஸ்தான் கலை கல்லுாரியில் மாலை 5.30 மணி முதல், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கும்பாபிஷேக விழா மதுக்கரை, மரப்பாலம், சஞ்சீவி ஆஞ்ச நேயசுவாமி கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல், இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு மேல் மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கிறது. வள்ளி கும்மி அரங்கேற்றம் ஆதி மாரியம்மன் வள்ளி முருகன் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி 108 வது அரங்கேற்ற விழா நடக்கிறது. கோவில்மேடு, பி.கே.ராமசாமி கோனார் நினைவு அரங்கத்தில், மாலை 6 மணிக்கு நடக்கிறது. காளிகா பீட பாரதி மகராஜ் காளிகா பீடம் ஸ்ரீ ஜூனா அகாடா மஹாமண்டலேஸ்வரர் சுவாமி ஆனந்தவனம் பாரதி மகராஜ் கோவைக்கு வருகை செய்கிறார். நல்லாம்பாளையம் ரோடு, மாதா அமிர்தானந்தமயி மடம், பிரம்மஸ்தான கோவிலில், மாலை 6 மணிக்கு நடக்கிறது.
6 minutes ago
7 minutes ago
7 minutes ago
8 minutes ago