உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலை மாணவர்களுக்கு பயிற்சி

வேளாண் பல்கலை மாணவர்களுக்கு பயிற்சி

கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலையில், முதுகலை மற்றும் பி.எச்டி., மாணவர்களுக்கு ஆராய்ச்சிகளை மையமாக கொண்டு, அறிவியல் பூர்வமான எழுத்துத்திறன் மேம்பாடு குறித்த பயிற்சி பட்டறை பல்கலை அரங்கில் நடந்தது. துணைவேந்தர் கீதாலட்சுமி பயிற்சியை துவக்கிவைத்தார். உயர்கல்வி நிறுவனங்களில், ஆராய்ச்சிகளுக்கும், ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடுவதற்கும், புத்தகங்கள் வெளியிடுவதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு, பிரத்யேக எழுத்து திறன் இருக்க வேண்டியது அவசியம். அதை மேம்படுத்தும் விதத்தில் மாணவர்களுக்கு, பல்கலை விஞ்ஞானிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது. 701 மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை