உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துஸ்தான் கல்லுாரியில் ஐடியா லேப் துவங்க பயிற்சி

இந்துஸ்தான் கல்லுாரியில் ஐடியா லேப் துவங்க பயிற்சி

கோவை: இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், புதிதாக ஐடியா லேப் தொடங்குவதற்கு அனுமதி பெற்ற கல்லுாரிகளின், ஐடியா லேப் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி நடந்தது.அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் நடந்த, இந்த ஐந்து நாள் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த, பேராசிரியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மாணவர்களின் புதிய சிந்தனைகளுக்கு, செயல் வடிவம் கொடுக்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. இந்துஸ்தான் ஐடியா லேபில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்களை இயக்குவதற்கான முழு பயிற்சியும் அளிக்கப்பட்டது.இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சரஸ்வதி, இணைச் செயலாளர் பிரியா, டீன் மகுடீஸ்வரன், முதல்வர் ஜெயா,ஐடியாலேப் தலைமை வழிகாட்டி ஜெயா, ஒருங்கிணைப்பாளர் சபரிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை