உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காயத்துடன் சுற்றிய யானைக்கு எர்ணாகுளம் மையத்தில் சிகிச்சை

காயத்துடன் சுற்றிய யானைக்கு எர்ணாகுளம் மையத்தில் சிகிச்சை

வால்பாறை: கேரள மாநிலம், அதிரப்பள்ளி அருகே, காயத்துடன் சுற்றிய யானைக்கு, எர்ணாகுளம் பயிற்சி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அதிரப்பள்ளி அருகே, ஆண் யானை ஒன்று நெற்றியில் காயமடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக சுற்றி வந்தது.கடந்த மாதம், வெற்றிலைப்பாறை பகுதியில் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க, சாலக்குடி டி.எப்.ஓ., லட்சுமி தலைமையில், வனத்துறை கால்நடை மருத்துவர் அருண்ஜக்காரியா தலைமையில் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, காயத்துக்கு மருந்து தடவி, சிகிச்சை அளித்தனர்.இருப்பினும், யானையின் உடலில் ஏற்பட்ட காயம் ஆறாத நிலையில், யானை சோர்வாக காணப்பட்டது. இதனையடுத்து, யானைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று அதிரப்பள்ளி வனப்பகுதியில் சுற்றிய யானையை வனத்துறையினர் 'கும்கி' யானையின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன்பின், நெற்றியில் இருக்கும் காயத்துக்கு மருந்திட்டனர்.கேரள வனத்துறையினர் கூறியதாவது:வால்பாறை அருகே, அதிரப்பள்ளி வனப்பகுதியில் இருயானைகளுக்கு இடையே நடந்த மோதலில், யானையின் நெற்றியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. முதல் கட்ட சிகிச்சையில், யானைக்கு ஏற்பட்ட காயம் சரியாகவில்லை. எனவே, மீண்டும் சிகிச்சை அளிக்கும் வகையில் 'கும்கி' யானைகளின் உதவியுடன், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.நெற்றியில் ஆழமாக ஏற்பட்ட காயத்துக்கு மருந்திட்டு, தொடர் சிகிச்சைக்காக எர்ணாகுளம் யானைகள் பயிற்சி மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை