மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் பலி
2 minutes ago
மறைந்த கவிஞருக்கு அஞ்சலி நிகழ்வு
3 minutes ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தொடர் மழையால் மரம் விழுந்து வீடு சேதமடைந்தது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இடைவிடாமல் மழை பெய்ததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதில், பொள்ளாச்சி சப் - கலெக்டர் குடியிருப்பு வளாகத்தின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது. அதே போன்று, சிஞ்சுவாடி ஊராட்சி லட்சுமாபுரத்தில், தொடர் மழையால், புளிய மரம் சாய்ந்தது. அதில், அதே பகுதியை சேர்ந்த குப்பன், 70, என்பவரது வீடும், அவரது சகோதரர் ராஜன்,60, வீட்டின் ஒரு பகுதியும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உடுமலை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
2 minutes ago
3 minutes ago