மேலும் செய்திகள்
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
29-Apr-2025
கோவை: கோவையில், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.கட்சியின் இளைஞரணி சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, மேற்கு மண்டல இளைஞரணி தலைவர் அபிராமி தலைமை வகித்தார். இதில், மெழுகுவர்த்தி ஏந்தி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
29-Apr-2025