உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயிரிழந்தவர்களுக்குகாங்., சார்பில் அஞ்சலி

உயிரிழந்தவர்களுக்குகாங்., சார்பில் அஞ்சலி

சோமனூர் : காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்., கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள், 2௬ பேரை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். கோவை வடக்கு மாவட்ட காங்., சார்பில், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சோமனூரில் நடந்தது.மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், இளைஞர் காங்.,நிர்வாகி நவீன்குமார், மாவட்ட துணை தலைவர்கள் முருகேசன், ஆறுச்சாமி, கிட்டாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரசேகர், உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர். மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்ற கட்சியினர், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை