உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வி.ஏ.ஓ.,வை தாக்கிய இருவர் கைது

வி.ஏ.ஓ.,வை தாக்கிய இருவர் கைது

உடுமலை : உடுமலையில், வி.ஏ.ஓ.,வை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.உடுமலை கணக்கம்பாளையம் கிராம வி.ஏ.ஓ., வாக பணியாற்றி வருபவர், கருப்புச்சாமி, 37. அவர், கடந்த, 6ம் தேதி தளி ரோடு, டி.வி., பட்டணம், நகராட்சி துவக்கப்பள்ளியில், தமிழக அரசு மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டை புதுப்பிக்கும் முகாமில் பங்கேற்றுள்ளார்.காலை, 9:00 மணிக்கு முகாம் துவங்கி, மாலை, 5:00 மணிக்கு நிறைவடைந்துள்ளது. முகாம் முடிந்து கிளம்பிய வி.ஏ.ஓ.,வை மறிந்த, டி.வி., பட்டணத்தைச்சேர்ந்த அருள்பிரதீப், 26, அருள்பிரசாத், 27 ஆகியோர், அதற்குள் முகாமை முடித்து செல்கிறாயா, என தகாத வார்த்தைகளால் திட்டியும், தாக்கினர்.மேலும் அங்கிருந்த மூங்கில் கட்டையை எடுத்து, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். வி.ஏ.ஓ., கொடுத்த புகாரின் பேரில், உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை